சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி ஜெகதீஸ்வரன்

நடிப்பு

நிகரில்லா நிகழ்கலையே நடிப்பு
நிகழ்த்துவோமே நாமுமதைப் பிடித்து
அகத்தினிலே காட்டுமது கூத்து
அசத்தியேநம் அனைவரையும் ஏய்த்து
புகழையுமே பூட்டுமது புகுந்து
பூணுவேடம் கலைக்காயே சூடின்
இகழ்வுதனை இரட்டிப்பாய் கூட்டும்
இக்கட்டைப் பிறருக்கு காட்டின்

அம்பலத்தே காட்டுகின்ற நடிப்பு
அருட்டிடுமே நவரசங்கள் தூவி
கும்பிட்டே காண்பவரும் நயப்பர்
குதித்துமோதிக் குதூகலமாய்க் கூவி
நம்பியவர் கக்குகின்ற நடிப்பு
இருட்டாக்கும் அறிவுதனைச் சீவி
தெம்பிழந்து வீழ்ந்திடுவார் சுருண்டு
நம்பியவரும் துயர்தனையே காவி

மனோகரி ஜெகதீஸ்வரன்