சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி ஜெகதீஸ்வரன்

காரோடத் தானோடி வந்தாள் வசந்தம்
பாரோடு கலந்தாடிப்
பூட்டினாள் பசுமை
சீரோடு சிறப்பெய்தச்
சிந்தினாள் நிகழ்வை
வேரோடே சரிந்திடவே
விழ்த்தவே தீதை

வசந்தத்தில் ஓர்நாள்
வண்ணம் காட்ட
வரைவிட்டேன் பாவை

துளிர்த்தன மரங்கள்
தளிர்களைத் தாங்கி
நிறைந்தன அவையும்
குடைகளை யாக்கி
சிரித்தன பூக்கள்
கிளைகளில் குந்தி
சிதறிய பின்னும்
திட்டின கோலம்
களித்தன வண்டுகள்
தேனதனை யுண்டு
காவினபின் மணிகளை
கருவினை யாக்க

அடுத்தடுத்துக்
கூவின குயில்கள்
குரலெடுத்து
விடுப்பெடுத்துக்
குழந்தையும்
குரல்கொடுத்தது
தனைமறந்து

தென்றலும் தீண்டித் துடைத்தது வெம்மை

மனோகரி ஜெகதீஸ்வரன்