காதல்
நுண்ணிய உணர்வே காதல்
நுழைந்தாலோ காட்டுமது நூதனம்
குலைந்து கருகினாலோ தீட்டுமது சாவை
எதுவானாலும் பாவுக்குக் கருவாகும்
அவனைவும் அவளையும் தீண்டுடிச் சீண்டும் காதல்
அந்திம காலத்திலும்
அகமேறும் காதல்
அதுக்கும் இதுக்குமாய் அரங்கேறும் காதல்
குஞ்சு குருமனுக் குள்ளும் இன்றுகாதல்
அஞ்ச வைத்து ஆட்டி
நஞ்சை தூவுதே
நாடகக் காதல்
மிஞ்சிப் பயிலின்
பொலிவிழக்குமே உண்மைக் காதல்
மனோகரி ஜெகதீஸ்வரன்