சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி ஜெகதீஸ்வரன்

சந்தம் சிந்திம் சந்திப்பு 216.
“ நீர்க்குமிழி”. காலமது வருமுன்னே
காலனும் வருவான்
தூரமது துடிக்க
சுருக்கை இடுவான்

செல்வேன் என்றே
செல்வமும் செல்லும்
நல்லோர் செயலை
நிறுத்தியும் செல்லும்
அல்லல் உள்ளேறி
ஆக்கினை செய்யும்
பல்விழுத்திப் பருவமும்
பழிப்புக் காட்டும்
கல்லாகி மனமும்
கருணையைச் சுருக்கும்
வெல்வார் எவருண்டு
நிலையாமை கழற்றி

நீர்க்குமிழின் தோற்றமும்
நிமிடக் கரைவும்
பார்த்திடச் சேர்த்திடுமே நிலையாமைக் கருவை
திருமதி மனோகரி. ஜெகதீஸ்வரன்.