சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி ஜெகதீஸ்வரன்

ஆளும் தலை மாற்றம்
அடுத்தவரும் அதே ராஜபட்சா கூட்டம்
புதன் போவாராம்
போகாராம் ரனில்
அடுத்த ஜனாதிபதி அவராம்
ஆதரிப்பாராம் மொட்டு கட்சி
அங்குசம் இனியும் அந்த
மொட்டிடம்தான்
ஆனை ஆதரிப்பார் இன்றி செத்த கட்சி
அதன் தலைவரையும் மக்கள் வெட்டி
ஆனாலும் அதிட்டமாய் வந்த பதவி
அனுபவி ராசா அனுபவி
தீ சுவாலை அணையவில்லை
நீ அறிவாய் இனி