சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி ஜெகதீஸ்வரன்

தீ

அடுப்பிலே எரிந்தால் தீ
ஆறும் வயிறு

காட்டிலே எரித்தால் தீ அழியும்
வளத்தொடு விலங்கு

நாட்டிலே எரிந்தால் தீ
நாசமே
நாளை என்பதே இல்லையே
இது நாம் கண்ட உண்மையே

தீமை சமைத்திடும் ஆயுதமே தீ
தீயோர் கையகப்படின்

தீட்டு இவரால் தீயைத்
தீண்டாதிருக்க
போட்டு விடுங்கள் பூட்டு

மேலோர் கையே ஏந்தட்டும் ஏற்றடும்
தீயை

மனோகரி ஜெகதீஸ்வரன்.