சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி ஜெகதீஸ்வரன்

பட்டினி

உண்ணாதிருத்தலே பட்டினி
உருவாகும் அதுவும் பலவழி
சொன்னால் புரியுமோ உனக்கது
சோடித்த வழக்கமானது
இன்று எமக்கது

மலிவான பொருளாய் எம்உயிர்கள் தெரிவானதால் கிடக்கின்றோம் பட்டினி
இழிவான மனிதர் இடுகட்டளையால் சருகாகிக் கிடக்கிறோம்
வயிறு சுருங்கி
பலியாடுகள் நாமாகித் தவிக்கின்றோம் விலைவாசி ஏறி
களவாடுதல் களமேறி
கருணை இருளானதால்
சுரமேற்றி உருவேற்றுகின்றோம் உலகை
சரிகின்ற எம்முயிரேந்த
உணவு நிறை கலங்களே எம் தேவை