விருப்பத் தலைப்பு
கடல் மைந்தன்
அலையடித்து இங்கும் அங்கும் ஆட்ட
வலையிழுத்து வாழ்வதிலே வலைஞன் நாட்டம்
மலைத்திடத் தருவான் மாமிச ஊட்டம்
சிலைவைத்து ஏத்தினோமா
சிக்கவைத்து தருமிவனுக்கு
அலையிழுத்து அகாலத்தில் அடங்கையில்
அஞ்சலித்தோமா
அழுதுபுரண்டு
கலத்திலே மிதக்கையில்
தொடரும் கருமைப் பொழுது
விலத்தியே வாழ்கின்ற விரும்பாத் துறவு
நிலத்திலே இவனுக்கு மட்டுமேன் நியதி தப்பிய நிகழ்வு
புலத்திலே பெருவளத்தைக் குவிப்பானுக்கு பற்றாக்குறைப் படர்வு
தப்பாது மீன்வகை தந்திட
உப்பைத் தின்று உவர்ப்பிலே ஊறிடுமிவன்
கூப்பாடு போட்டினும்
கேட்காது
நலனும் பூக்காது
ஆள் காட்டி குருவிதான்
அடையாளம் காட்டுமோ?
பிடித்த இடத்தில் புகுவதோ
கடல்மைந்தன்
விருப்பு
அதனால்தானோ
சடங்குக்கடங்காது சங்கமமாகிறான்
கடலோடு