சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி ஜெகதீஸ்வரன்

தலை நகர வாசம்
தந்திடுதே சோகம்
விலையேற்றம் நிதம்
விழ்ந்து விட்டோம் நிலம்.:

தூண்டிலாய் மின் துண்டிப்பு தண்டிக்க
கண்ணில் தோன்றிக்
காணாது
மண்ணெண்ணெய் நிந்திக்க
மூளா அடுப்புகளே எம் வசம்
மூட்டும் முயற்சியில் செய்கின்றோம்
முழு மூச்சாய் நாளும் தவம்

பற்றாக்குறைத் தொற்று
பறந்து உழைத்தாலே. பறக்கும் எம் பசி
உற்றவரும் காண்பர் உவப்புடன் நாவில் ருசி

கொண்டிட்டான் தொற்றும் தொடர் ஆட்சி
மீண்டிட்டால் காண்போம் நல் ஆட்சி
விற்றிடச் சொத்துக்கள் வீரிய உழைப்பு
கற்றிட்ட தொழில்கள்
கைவசம் இருந்தும்
கையறு நிலையே வாழ்வோட்டம்
கையை கடிக்குது
காசு திண்டாட்டம்.