விருப்பத் தலைப்பு
கொட்டிடும் முரண் கொட்டுமே கொடுக்காய்
விட்டிட முடியாப் பகையையே
தொடுவர் இவர் நாவல் நாளும்
ஆதலால்
கனியது இருக்கக் காயது பற்றிடாதே நீயும்
தேனினிய சுவையே தேவையே பேச்சிலும்
காணுநீ அதையே கவனித்தே கொட்டியே
நன்றியை நறுக்குவதும் நாராசப் பேச்சே
இன்றோடு விட்டுவிடு இதயச் சுருக்கை
வென்றோடி இங்கிதத்தை எங்கும் இறைக்கட்டும்
அங்கதம் கலவா அமுதப் பேச்சு