சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி ஜெகதீஸ்வரன்

முள்ளிவாய்க்கால்

கறையப்பி கதைதுப்பு
களமாகியது முள்ளிவாய்க்கால்
இறையிருப்பை ஏளனமாக்கி
ஏங்கவைத்தது
முள்ளிவாய்க்கால்
சிறைகாட்ட முட்கம்பி
வேலிட்டது முள்ளிவாய்க்கால்

உயிர்கழற்றிய உடல்மறைக்க
புதைகுழியானது முள்ளிவாய்க்கால்
மயிரிழையில் தப்பியோருக்கும்
அப்பியது ஊனத்தை முள்ளிவாய்க்கால்

இனவெறியர் எறிகுண்டு
இலக்காலே
இதுகண்டாயோ
மனப்புகைச்சல் நீங்கிடவோ
மன்றாடி ஊற்றுகின்றாய்
நினைவுனாள் கஞ்சியை
நிகழ்வுக்காய் அஞ்சிநீயும்

மனோகரி ஜெகதீஸ்வரன்

தளத்தில் பதியவில்லை

காவுது