சந்தம் சிந்தும் சந்திப்பு
விருப்பத் தலைப்பு
வராததுமேனோ இங்கே
நாக்குச் செத்து
நாலும் விட்டு
தேக்கு உடலும்
தேயக் கெட்டு
பட்டுக் கிடக்கின்றோம்
பாதகம் பட்டு
தட்டேந்தும் எம்கரங்களைத் தள்ளி
இறக்கி
யாசகக் கூனலை
வேரோடு தறிக்க
யாரும் வராததுமேனோ இங்கு -எம்
வாசகமும் கேட்காது
போனதுமேனோ உங்கு
முட்டி மோதியுதவி கொட்ட முன்னிலை காட்டாததுமேனோ
பட்ட கடனைத் தருவோம் பின்னே
பழுதுகள் மறைந்து
பாதைகள் சீரான உடனே
விட்டுவிடாதீர் அதுவரை
வீணார் கைகளில் சாக எமை