சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி ஜெகதீசன்

குந்த வந்ததோ குத்தகை நிலம்
குந்தியிருக்க இவருக்கு மட்டுமோ இடம்
முந்தி இருந்தவர் முகவரியில் நாமே

அந்தரிக்க அடக்கி ஆளனி சுருக்கி
தொந்தி பெருக்க சுரண்டிச் சொகுசாளா
தந்தது வரமேதுவோ
தலைவனென்ற பதமோ

கேட்டால் வரும் கேடு
கேளாமலே நீயும் ஓடு
பட்டாலே தெரியும் பாடு
பவித்திரம் கெட்டவரை கனவிலும் தீண்டாதே

அந்தமறியா அறிவுச் சிக்கலே ஆட்டுது இவரைத் தினம்
பந்தப் பசையற்ற பாங்கே
சொந்தங்களை துரத்துது வனம்

திருந்தாத இவரிருப்பால் தீமிதிப்பே தினம் தினம்
வருந்தாத வாழ்வொன்று
வாழுமோ எம்மினம்