சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி ஜெகதீசன்

வாழ்த்துப்பா

தமிழே வாழி !
உமிழும் வாய்களும் வாழி!
உரமிட்டே காப்போரும் வாழி!
உரித்துடையோர் அனைவரும் வாழி!

சொல்லடுக்குப் பொருள் செறிவு குவிய
வரித்தொடுப்பால் வகையெடுப்பால்
விரிந்த பாமுகப் பூக்கள்
உதிராப் பூக்களே -இரு
பத்துப் பாவலரின் எண்ணக் கருக்களின் சரத்தொடுப்புகளே
சமூகச் சங்கதிகளின்
சர வெடிப்புகளே
நல் நல விளைவுக்கான விதைப்புக்களே

நெஞ்சுக் கூட்டுக்குள்ளே
இடவலமிட்ட ஆசை
சந்தம் சிந்தும் சந்திப்பாய்
போர்முகம் காட்டாப் பாமுகத்தில் கிளைவிட்டது
ஒலியலை ஒளியலை
இணைவுகளால்
எல்லோரோடும் இணைந்தது

தொகுப்பாளர் சபையேற்றத்தால் பாமுகப் பூக்களில்
பதிவேற்றம் பெற்றன
முகங்கள் இருபது
பாவையவர் பண்பும் பெரிது
பார்வையும் விரிவு
அகத்தே உணர்ந்து உட்புகுந்து வரிகளை ஆய்ந்தே
பிய்த்தெறிவர் குறைகள்
பிடித்திடத் தருவார் நிறைகளை
அணைத்தே அவர் செல்லும் பாங்கும் அவசியமே
பாவையவரின் திறன் கவிகளுக்கு உரமே
வந்த வெளியீட்டு விருப்பும் வரமே
வெளியீடு கண்டது அதனால் தமிழில் பாமுகப் பூக்கள்
தளத்தலைவர் வினைத் திறனும்
தமிழ்பற்றும் தோழமையும் உடன்வர

வாழியவே இவர்கள் அனைவரும்
வற்றாத் தமிழ்ப் பற்றுடன் நல நிறைக் குவிவுடனும்

நன்றிகளைத்
தூவி விடை பெறுகின்றேன்
மலருடன்.

நன்றி
வணக்கம்