சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 247
26/12/2023 செவ்வாய்
“சிரிப்பு”
————
ஆதவன் மேற்கே மறைந்தது..
அல்லியும் தன்வாய் திறந்தது..
மாதேவன் மதியும் சிரித்தது..
மங்கள இரவும் மலர்ந்தது!

கிழக்கு வானம் வெளுத்தது..
கீழே ஆதவன் தெரிந்தது,,,,.
குளத்தில் தாமரை சிரித்தது..
குவலயம் துயிலும் கலைத்தது!

மிதிலை வீதியும் நிறைந்தது..
மேல்நின்று கண்ணும் சிரித்தது..
எதுகை மோனை இணைந்தது..
எடுகை வில்லும் தெறித்தது!

மங்கல மேளம் முழங்கியது!
மானிட மெல்லாம் துதித்தது!
எங்கணும் சிரிப்பு அதிர்ந்தது!
எழுக எழுகவென ஒலித்தது!

சிரிப்பில் ஆயிரம் வகையுண்டு!
சிந்திப்பின் நேரப் பகையுண்டு!
நரிக்குணம் நிறைந்த சிரிப்புண்டு!
நலமே பலதரும் சிரிப்புமுண்டு!
நன்றி
மதிமகன்