சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 239
24/10/2023 செவ்வாய்
ஆறு மனமே!
காலை மாலை யென்று
கடிதாய் வேலை செய்து
நாலு இரண்டு சேர்க்கும்
நாளும் வரும்-ஆறு மனமே!

வேலை யென்று சொல்லி
வெளி நாட்டிற் கனுப்பி
காலை வாரும் கயவர்
கருகுவர்-ஆறு மனமே!

பித்தம் வாதம் போன்ற
பீடை பிணிகள் நீங்கி
சித்தம் இனிக்க வாழும்
சிறப்பு வரும்-ஆறு மனமே!

குழந்தை குட்டி குஞ்சை
குண் டெறிந்து சிதைக்கும்
பாழும் கொடிய யுத்தம்
படியும்-ஆறு மனமே!

கூறு போட்டு உலகை
குட்டிச் சுவர் ஆக்கும்
நாறும் எந்த அரசும்
நலியும்- ஆறு மனமே!

நன்றி
“மதிமகன்”