சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 208
31/01/2023 செவ்வாய்
“விருப்பு”
ஏழை பணக்காரப் பிரிவு வேண்டாம்!
எதற்கும் குதர்க்கம் பேச வேண்டாம்!
கூழானாலும் பகிராது விட வேண்டாம்!
கும்பிட்ட. கையைத் தட்ட வேண்டாம்!

நாளை பார்ப்போம் என்று வேண்டாம்!
நல்லன செய்ய நாளேதும் வேண்டாம்!
வேளை வரட்டுமென விலக வேண்டாம்!
வல்லமை காட்டி வதைக்க வேண்டாம்!

முள்ளை முள்ளால் எதிர்க்க வேண்டாம்!
முதியோர் சொல்வதை மீற வேண்டாம்!
வெளளை தானென எண்ண வேண்டாம்!
விக்ஷப் பாம்புகளை நம்ப வேண்டாம்!

அள்ளி அணைப்போரை அணுக வேண்டாம்!
அஞ்சுவதை அருகில் வைக்க வேண்டாம்!
சுள்ளி தானே என சொறிய வேண்டாம்!
சுய விளம்பரம் எதிலும் வேண்டாம்!
நன்றி
மதிமகன்