சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தம் சந்திப்பு
வாரம்: 160
01/02/2022 செவ்வாய்
தாயே துணை நீயே!
நயினையில் உறையும் தாயே
நாகபூஷணி உருக் கொண்டாயே
நாற்புறமும் கடல்சூழ் தாயே
நமக்கென்றும் துணை நீயே!

நகுலாம்பிகை எனும் தாயே
நகுலேஸ்வரர் துணை நீயே!
வண்ணை வாலாம்பிகை தாயே
வைத்தீஸ்வரர் துணை நீயே!

கேதீச்சரம் வாழ் கௌரி தாயே
கேதீச்சரர் துணை என்றும் நீயே!
கோணேச்சரம் உறை மாதுமையே
கோணேச்சரரின் துணை நீயே!

முன்னேஸ்வர வடிவாம்பிகையே
முன்னை நாதனின் முதலே நீயே!
மின்னும் மூக்குத்தி மீனாட்சி தாயே
மதுரை சுந்தரேஸ்வரர் துணை நீயே!

காஞ்சி உறை காமாட்சி தாயே
கைலாச நாதரின் துணை நீயே!
காசியில் உறையும் விசாலாட்சி தாயே
கணவர் விஸ்வநாதன் மனத்தில் நீயே!
நன்றி
“மதிமகன்”