சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 158
செவ்வாய் 18/01/2022
“பாமுகப் பூக்கள்”
பாமுகம் அளித்த பூமகளே
பாவலர் போற்றும் பாமகளே
“பாவை” மகிழும் பெருமகளே
பார்க்கையில் நீ கலைமகளே!

அழகிய அட்டைப் படத்தாலே
அகிலம் அதிர வைத்தாயே!
பழகு தமிழிலே கவி சுமந்தே
பலரையும் களிக்கச் செய்தாயே!

இருபது மலர்களின் ஓர்கொத்து
இன்பம் தருமோர் அரும் முத்து!
பெருகுது அன்பு பெருவெள்ளம்
பேதை உன்னைக் கண்டதுமே!

சின்னவர் பெரியவர் பேதமின்றி
சிந்தையில் பிறந்த அருவித்து!
அன்னைத் தமிழைஅகத்திருத்தி
அன்பில்விளைந்த ஓர் சொத்து!

எம்மவர் கவிஞர் எழிற்கோலம்
எழிலாய் சேர்ந்த திருக்கோலம்
மனங்கவர் மாபெரும் கருவூலம்
மறுவின்றி வாழும் மனம்போலே!
நன்றி
“மதிமகன்”