சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 217
04/04/23 செவ்வாய்
“தவிப்பு”
———-
மனத்தில் நாளும் தவிப்பு!
மண்ணில் என்றும் இருப்பு!
கனத்தில் அதனின் சிறப்பு,
காலம் கொடுத்த அமைப்பு!

தாயுள் கருவின் தவிப்பு,
தரணி காணும் விருப்பு!
ஆயுள் முழுதும் நிலைப்பு!
அவனி தரும் அமைப்பு!

அணைகள் கொண்ட தவிப்பு,
அன்னை அவளின் வளர்ப்பு!
பிணைகள் தாராத தடுப்பு,
பிறழ்வு கொள்ளும் அமைப்பு!

பாலை உண்ணும் விருப்பு,
பண்டம் உடையும் முனைப்பு!
வேளை அறியாத நினைப்பு,
வேதனை தருமோர் தவிப்பு!

கற்றலை நாடும் முனைப்பு,
காலமது தந்திடும் சிறப்பு!
உற்சாக பானத்தின் உவப்பு,
உனக்குத் தாராது மதிப்பு!

விரும்புவது அமையும் தவிப்பு,
விளையாது வேளை விடுத்து!
கரும்பும் முற்றினாலே சுவைப்பு!
காலத்தின் எமக்கான படிப்பு!
நன்றி
மதிமகன்