சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 269
11/06/2024 செவ்வாய்
“பாமுகமே வாழீ!”
————————-
இலண்டனில் பிறந்தவளே!
இன் தமிழை வளர்ப்பவளே!
அண்டமெலாம் செல்பவளே!
அம்பலத்தார் புத்திரியே!

இலக்கியம் தருபவளே!
இலட்சிய நாயகியே।!
கலக்கமும் தீர்ப்பவளே!
கவிதையின் ஊற்றிடமே!

சொல்வன்மை தருபவளே!
சோதியாய் ஒளிர்பவளே!
பல்வேறு மொழிகளையும்
பயிற்றுவிக்கும் பாமுகமே!

தயக்கங்கள் தீர்ப்பவளே!
தற் துணிவு தருபவளே!
மயக்கம் களைபவளே!
மாதவமாய் சிறப்பவளே!

கலைகளின் தலைமகளே!
கலைமகளின் கைமகளே!
விலையில்லா இருபத்தேழு
வயதினைக் காண்பவளே!

நிலவும் கடலும் போல்..
நீடூழி நீயும் வாழியென..
பாவாலே வாழ்த்துகிறேன்!
பல்லாண்டு வாழி பாமுகமே!
நன்றி
மதிமகன்