சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 267
28/05/2024 செவ்வாய்
வேள்வி
————
உயிரை எடுப்பதும் வேள்வி!
உணர்வை அழிப்பதும் வேள்வி!
பயிரைக் கெடுப்பதும் வேள்வி!
பாரினில் எங்கில்லை வேள்வி!

இயற்கை செய்திடும் அனர்த்தம்,
இதனால் வரும்மன அழுத்தம்!
செயற்கையில் வந்திடும் அழிவு,
சேர்ந்திடில் பெரும் மனப் பிழிவு!

உயர்ந்து வந்திட்ட பேரலைகள்!
ஊரினுள் சென்ற சில நொடிகள்!
கவர்ந் திழுபட்ட இன்னுயிர்கள்!
காலம் மறந்திடாப் பெரு வலிகள்!

அறுபதில் இருந்து கண்ட பேறு!
அங்கே ஓடுது நம்குருதி ஆறு!
வெறுமின அரசியல் பூசுது சேறு!
வேள்வி தானங்கு நடக்குது பாரு!

உலகெங்கும் நடக்குது வேள்வி!
உள்ளத்தில் ஏனென்று கேள்வி!
கலகங்கள், தாங்காது இப்பூமி!
காலங்கள் சொல்லுமா நற்சேதி!
நன்றி
மதிமகன்