சந்தம் சிந்தும் கவிதை

மட்டுவில் மரகதம்

மொழி

பல் மொழி பேசவும்
கற்க கசடற கற்கவும்
இனியவை பல கூறி
ஆறி நோயிலிருந்து தேறுதலடையவும்
அவசியமே அவசியம்
மொழியில் அருமை

இனிமையான மொழி
இனிக்கும்
மெல்ல உள் மனதில்
நுழையும்
அனைத்தையும் கொண்டு வரும்
கனல் போல் கக்கும்
உணர்ச்சி குறிப்புடன்
உயிரற்ற கூட உயிர்க்கவும் வைக்கும்
பேசவும் வைக்கும்
எம் மொழியில்
பேசினாலும் புரியுமாம் பிரபஞ்சத்திற்கு

ஒரு கணம் பேச
முடியாமை ஏற்பட்டால்
அதன் விளைவாக
நீரிலே அழுகின்ற
ஆமை போல மாறுமே!
யாரறிவார் வேதனையை

பேச ஒரு மொழி
இருந்தால் போதும்
உலகத்தி்ல்
ஒவ்வொன்றும் ஒன்றோன்று
தொடர்பாடல் கொள்கிறது
உள்ளே உள்ளவற்றை
வெளிய கொண்டு வந்து
வருத்தம் இல்லாதவனாக
நிறுத்திவிடும்
பேச வேண்டும்
பேசிய அந்த மொழியாலே
மனமார பேசினாலே
நோய் விட்டு போய் விடுமாம் மூன்னோர் வாக்கு

உயிரான தாய்வழி
தமிழ்மொழி உயர்வாக வேண்டும்
உயிரோடு உயிராக
வாழையடி வாழையாக
உறவாடி மகிழ
இனிய மொழி
தாய் மொழி போல் எங்க உண்டு

இதயங்களிலிருந்து
கொண்டு வந்து
பிரபஞ்சம்
முழுவதும் பரப்பிட ஒன்று போதும்
காசு பணம் சொத்து நகை சம்பாதிக்க தேவையில்லை
பரப்ப
இனிய மொழி ஒன்று போதுமே
போதுமே!