சந்தம் சிந்தும் கவிதை

மட்டுவில் மரகதம்

ஊரொடு கூட வலி
வேரொடு போகும்

யாரோடும்பேதம்
இனிமேலும் வேண்டாம்

ஆறோடும் மண்ணில்
பாலாறும் ஓடும்

நீரோடும் நிலமாம்
பாலாறு தேனோட

நீரொடு பகைத்தால்
யாரோடு நோவேன்

தாயோடு நேர்ந்தால்
அவளோடு அழுவேன்

என்னோடு வந்தால்
உம்மோடு சாய்வேன்

உப்பில்லா விட்டால்
குப்பையோடு போயிடும்மாம்

இல்லாது போனால்
யாரோடு நோவேன்