சந்தம் சிந்தும் கவிதை

ப.வை.ஜெயபாலன்

பாமுகம்
“இருபத்து ஐந்தாண்டை
எட்டிவிட்ட பொழுது
இதயத்தில் ஊறிடும்
தானாக மகிழ்வு
ஒலியான ஆரம்பம்
உயர்வாகி உச்சம்
ஓயாமல் தமிழ் வளர
உழைகின்றது நித்தம்
அதிகாலை முதலாக
ஆக்கங்கள் தந்து
ஆர்வமுடன் இணைகின்றார்
அனேகர் தொடர்ந்து.
இருபத்தி மூன்றாண்டு
இதனில் தொடர்ந்து
இருக்கின்ற பெருமை
எனக்குள் நிறைந்து.
வாணிக்கும் மோகனுக்கும்
வாழ்த்துகளை பதிவோம்
வாய்ப்பளித்து வளர்த்தமைக்கு
நன்றியை பகர்வோம்