சந்தம் சிந்தும் கவிதை

ப.வை. ஜெயபாலன்


“சந்தம் சிந்தும் சந்திப்பு 264
“விழிப்பு”

“புகை வண்டிப் பயணத்தின் போது
போய் ஒரு நிகழ்வாலே மீள்வத்த போது
நகைப் பொலி கும்மாளம் நண்பர்
நால் ஐந்து பேர் சேர்ந்து
வெறி ஏறி பன்பல்

பணம் தேடும் மார்க்கத்தை தேடி
பலரும் பல் வழிகளை கூறினர் வாரி
கணம் ஒன்றில் தேடலாம் கோடி
களவாடி னால்சேர்ந்து வங்கியை நாடி….

சொத்துகள் நிறை நங்கை யாளை
சொத்தியோ குருடோ கட்டினால் தாலி
கொட்டிடும் சீதனம் கோடி ,
குதிரையில் கட்டலாம் என்றெலாம் பாட….

கையிலே பழக் கூடை ஒன்றை
காவியே வித்திட கூவியே வந்த
பையனின் தோற்றத்தில் ஏழ்மை
பரிதாபம் பொங்க நான் நீட்டினேன் நோட்டு…

கையிலே பழங்களை தந்தான்
கணக்காக தர மீதி இன்றியே
நொந்தான்
பைய உன் முயற்சிக்கு இம்மீதி
பரிசென சொன்னதும் பதறியே வாடி…

உழைக்காத பணம் வேண்டாம் என்றான்
ஓடியே தேடி என் மீதியை தந்தான்
விழித்தனர் சிறுவனின் செயலால்
வேடிக்கை பேசியோர்
வெட்கி தலை குனிவாய்.”
-ப.வை.ஜெயபாலன்