வியாழன் கவிதை

பொன்.தர்மா

வணக்கம்.
இல.528.
வேண்டும் வலிமை.

உடு கை இழந்திடினும், உறவுகள் மறந்திடினும்.
ஒரு கோல் கையூன்றி, ஒற்றைக் காலில் நடந்திடினும்.

மனம் எனும் தோணியிலே, மகிழ்வோடு பயணிக்க.
திடம் என்னும் துடுப்பசைக்க, வேண்டும் வலிமை வேண்டும்.

வெறும் கையாக இருந்தாலும், கிறுங்காத துணிவு வேண்டும்.
முளத்துண்டு கட்டினாலும், விழிகளில் நீர் ததும்பாது இருக்க வேண்டும்.

சுற்றங்கள் வெறுத்திடலாம்,சுமைகள் தலையில் ஏறுடலாம்.
கற்ற வித்தை கூடக்,கை கொடுக்காது இருந்திட லாம்.

வெற்றிப் படிகளுமோ, வழுக்கி யும் விழுத்திடலாம்.
ஒற்றை இழை பிடித்து, ஓங்கி நீ,உயர்ந்திடவே.
வேண்டும் வலிமை…. வேண்டும்
பொன்.தர்மா