வணக்கம் இது வியாழன் கவிதை நேரம்.
இல. 525
அதனிலும் அரிது.
**********************
மண்டலத்தின் அழகினிலே மயங்காதோர் அரிது.
விண்ணை வலம் வந்தோர், எண்ணிக்கையில் அரிது.
மானிட ஜென்மமோ அரிதிலும் அரிது .
கூன் குருடு இன்றிப் பிறப்பதுவோ, மேலும் அரிது.
வீறு கொள் வேங்கைபோல, வெறியாட்டம் கொள்ளாத,மாந்தருமோ அரிது.
வெந்திடும் புண்ணில்,வேல்பாச்சிப் பார்க்காது ,இருப்பவரும் அரிது.
தள்ளாடும் பருவத்தில் ,தடித்துணையாய்,இருப்பவரும்,அரிது அரிது.
தனை ஈன்ற தாயவற்கு ,தலை உச்சி மோந்தவர்க்கு ,இறுதிவரை உதவிடுவோர், அதனிலும் அரிது.
பொன்.தர்மா