வியாழன் கவிதை

பொன்.தர்மா

வணக்கம் இது வியாழன் கவி நேரம்.
இல.524
***சிரிப்பு***
””””'”””””'””””””
வார்த்தைகள் ஏதும் அற்ற, வாய்மொழி.
வாய் திறந்து , அள்ளிச் சொரியும் அன்பு மொழி.

விலை கொடுத்து வாங்காத, ஒரு கொடுப்பு .
வெகுமதியாய் நலம் கொடுக்கும், அகத்தின் உதிர்ப்பு.

குழந்தையின் சிரிப்போ, கொட்டிடும் சில்லறை.
கூடியே மகிழ்ந்திடின் , மீட்டிடும் மெல்லிசை.
சிரிப்பு. சிரிப்பு
நோய் தன்னைப் போக்கிடும் , நுண்ணிய நிவாரணி.
நொறுங்கிடும் இதயங்களை ஒட்டவைக்கும், இழை போன்ற காரணி.
சிரிப்பு சிரிப்பு.
பொன் . தர்மா