வணக்கம் இது வியாழன் கவிதை நேரம்.
இல.522.
****உன்னதமே உன்னதமாய்****
ஆறறிவு கொடுத்து,அகிலத்தில் முதலாக்கி-
பாரினிலே பெருமைகொள், படைப்பதனைத் தந்ததுமே,உன்னதமே.
வாழ்வுதனைக் கொடுத்து , வளங்கள் பல சேர்த்து,
தாழ்விலா, தலை நிமிர்ந்து, நடைபோட வைத்ததுமே.
கண்களுக்கு விருந்து அளித்து , கொடு நோய்க்கு மருந்தளித்து
அண்டத்தின் அசைவுக்காய், அயராது விழித்திருந்து .
தெண்டாட்டம் காணாது, தூணாகத் தோள் கொடுப்பு .
உன்னதமே..
. விளக்கிற்கு எரி பொருளாய் , திரியதற்குத் தூண்டியுமாய் .
இரதத்திற்கு , அச்சாணியாக, நாண் பிடிக்கும் நாயகனாய்த் , திகழ்வதுவும்,
…..உன்னதமே…..
உலகிற்கே ஒருத்தராய் ,உயர்ந்திருக்கும்,உன்னதரே.
உன்னதமே உன்னதமாய்.
பொன்.தர்மா