வியாழன் கவிதை

பொன்.தர்மா

வணக்கம் இது வியாழன் கவிதை நேரம்.
இல.521
*** விடியலின் உன்னதம்***
வெள்ளந்திப் பொழுது வெள்ளாப்பிலே,ஜனனம்.
வெளிச்சத்தை விழுங்கிய, இருளோ , அவலமாக மரணம்.

காலைக் குருவிகளோ, கீச்சு , மாச்சு என்று கல கலத்துச், சத்தம்.
மாலையாவதற்குள்,மறுபடியும் வயிறு நிரப்பவென , ஓட்டம்.

அயர்ந்திட்ட கண்களோ, இமை வெட்ட மறுக்குது.
இறுகப் பிடித்த போர்வையோ, நழுவிப் போகத் தடுக்குது.

அன்றாடும் உழைப்பாளிக்கோ,அடுத்த நேரத்தை எண்ணி எண்ணித்,தலைச்சுற்று.
வண்டாட்டம் ,பறப்பவர்க்கோ ,வறுக வேண்டுமென்று , பெரும் பித்து.

தெண்டாட்டம் களையவே, தினம் , தினம்,தோன்றி மறையும் விடியல்.
வெள்ளாப்பும் , வெகு இருளும், வகுப்பதே , விடியலின் உன்னதம் .

பொன்.தர்மா