வியாழன் கவிதை

பொன்.தர்மா

வணக்கம் இது வியாழன் கவி நேரம்.
இல.519
*** உருமாறும் புதிய கோலங்கள்***
பள்ளிப் பருவமதில் ,பட்டாம் பூச்சிகள் போல் ஆட்டம்.
துள்ளித் திரிந்த வேளை,துடுக்காகச் சுற்றி ஓட்டம்.

அள்ளி அணைத்து அன்னை,அன்புப் பரிசு ,கொடுத்த காலம்.
வெள்ளி, விடியலிலே , வெறித்தோடியது போல், காட்சிக் கோலம்.

கலியுக காலமதில், உருமாறும் பல,பல தோற்றங்கள்.
நிலையில்லாத மானிடமோ, வழி தெரியாத் , தடுமாற்றங்கள்.
வாலறுந்த பட்டமாக, வானத்திலே சுழன்று ஆட்டங்கள்.
நூல் இழையில் தொங்கி நின்று , தேன் குடிக்கப் போராட்டங்கள்.

வாதம், பித்தம து , விறுவிறுப்பாய்த் தலைக்கேறும் , கட்டங்கள்.
வாழ்வில் நல்வழிகள், வதைபட்டுத், தூக்கிலேறும் பக்கம்கள்.
ஆலமது அமிர்தமாகும், அணுகுண்டு ,விளையாட்டுப் , பந்து ஆகும்.
****உருமாறும் புதிய , புதிய கோலங்கள்****
பொன்.தர்மா