சந்தம் சிந்தும் கவிதை

பொன்.தர்மா

வணக்கம் .
சந்தம் சிந்தும் கவி நேரம்.
*** கோடரிக் காம்பு ***

கையடக்கம், தன்னடக்கம் , குசும்புக்காரக் , கொலைக் கூட்டம்.
கூட்டான கருவியுடன், களம் நின்று போராட்டம்.

தலையின்றி வால், கொலையாடவும் முடியாது.
வால் இன்றி, தலையால், கொடி நாட்டவும் இயலாது.

மந்திரியாய் இருந்து மாயைக்குள்ளே புகுந்து —
தந்திரத்தால் தன்குலத்தைத், தரைதனிலே படுக்க வைக்கும்.
கொக்கா கோடரிக்காம்பா
வறுமைதனை நீக்கி, வயிற்றுப் பசி போக்க வைக்கும் , கில்லாடி .
வாயாடிக் கும்பல்களால், குலம் கொல்லி என்ற பட்டம் சுமக்கும், ஒரு உபகாரி .

ஆடுகின்ற ஆட்டத்திலை, அதன் மேலே , குறுணியும் குற்றமில்லை.
கூடுகிற கூட்டத்தாரின், குத்துதலோ , பாழும் மனது, கொஞ்சமும் பொறுப்பதில்லை..

பொன்.தர்மா