சந்தம் சிந்தும் கவிதை

பொன்.தர்மா

வணக்கம் இது சந்தம் சிந்தும் கவி நேரம்.
*** குடுமி வாத்தியார் ***
———+———
நெற்றியிலே, நீளமான திருநீற்றுப் பட்டை .
நீளக் கைகொண்ட , நடுத்தர ரகமான சட்டை .

முன்புறம் வழித்தெடுத்த , பாதி வழுக்கை மண்டை .
பின்புறம் வடம் சுற்றினாற் போல , சரிந்து ஆடும் , அவர் கொண்டை .

பழுத்த சைவம், பரம்பரைப் , புகழ் பூத்த , பெரும் பிரசங்கி .
பலநூறு பாக்களுக்கும்,பயன் சொல்வார் அவர் , முழங்கி .

தொன்மைத் தமிழைத், துலங்கவே வைக்கும் , இதயத்தின் துடிப்பு .
வன்மையற்ற , வாயாடித்தனம் , வார்த்தையாலே விளையாடும், இலக்கணக் கோர்ப்பு .

அஞ்சா நெஞ்சுடையார், அகம்பாவம் ஏதும் அறியார் .
சொல்லால் சுட்டுமிலார், சுரண்டுவதை , அறிந்துமிலார் .
கல்லாரைக் கண்டாலும் , கடுகளவும், நிலை மாறார் .
பொல்லாரைக் கண்ணடாலும் ,தன், படி விட்டு , இறங்க மாட்டார் .
குடுமி வாத்தியார்
பொன்.தர்மா