வணக்கம்
இது வியாழன் கவிதை நேரம்.
******** முருகன், வேலன், கந்தன்*
————+——+++—–+————-
அறுபடை வீடு, அமர்ந்திருக்கும் முருகன்.- அவர்
அன்பர் உள்ளம் , கொள்ளை கொள்ளும் அழகன்.
முத்தமிழின் முகவரியாய், பவனி வரும் கந்தன்.
தண்டத்தை ஏந்திக், தரணி ஆளும் தனையன்.
வேல் கொண்டு , வீரத்தினை, விண்ணவரும் மண்ணவரும் , அறிய வைத்தவர்.
வேலினைக் கொண்டே , வெற்றிவாகை சூடிய வேலவர்.
சூரனைக் கூறு செய்து, சேவலும் மயிலும் , ஆக்கிய செந்தூரான்.
சீர் ஓங்க அறிவு தரும், சிங்காரத் தேவன் மலைச் சிவபாலன்.
அன்னையின் சக்தியை, அகிலமே அறிய வைத்த, அகிலாண்டேஸ்வரி மைந்தன்.
அன்புடை மைந்தராய், உயர்ந்த நல் குருவாய், ஆசைமிகு சோதரனாய் , மகிழ்ச்சி தரும் பெருமானார்.
முருகன், வேலன், கந்தன்
பொன்.தர்மா