வணக்கம் இது சந்தம் சிந்தும் கவி நேரம்.
“””””””””” பரவசம் “””””'””””
பந்தலிலே பாட்டு, பாமுகத்தில் கூத்து.
பாவை அண்ணா நாவில், சரசமாடும் , தமிழின் குழல் வேட்டு.
பரவசம்
சின்னஞ் சிறிசுகள் , பாமுகத்தில் கூடியே குலாவுதல் பரவசம்.
செந்தமிழ் அதனையே, கசக்கிப் பிழிந்துமே , எடுத்துக் கொடுப்பரே , அவர், தமிழ் ரசம்.
முன்றலில் இருப்பவர், மூச்சது தமிழ் என , மூழ்கியே நிற்பதும் ,ஒரு ரகம்.
தென்றலில் ஆடிடும், திவ்விய மலர்களும், தக்கிடத் , திமி எனக், காட்டுமே , நவரசம்.
பாமுகப் பந்தலில் ,ஒன்றாகவே சேர்ந்து, உணர்வொடு , கவி , படிப்பது பரவசம்.
பச்சைப் பிள்ளை முகம், பளிச்சென்று கண்டதும், பட்டதெல்லாம் மறந்து , துளிர் விடும் ,பரவசம்.
பரவசம் , பரவசம்
முற்றத்திலே நின்று, முழுமதி பார்த்தால் , பத்தும் , பறக்க வைக்கும் பரவசம்.
பரவசம்…..
. பரவசம்.
பொன்.தர்மா