வியாழன் கவிதை

பொன்.தர்மா

வணக்கம்.
வியாழன் கவிதை நேரம்.

இல.514
வரவேற்போம் வாழ்த்திடுவோம்.
**************************************

ஆங்கில வருடமோ அவனியில் உதித்திருக்க.
அடுத்தது பொங்கல் என்று , முரசு மது கொட்டி முழங்க.

அமளியுடன் , ஆரவாரம், ஆதவர்க்கு விருந்துபசாரம்
தலைமகளாம் ,தை மகளுக்குத் , தரணியெங்கும் , பெருமையுடன் புகழாரம்.

தேசம் பசிதீர்கப், பாதம் நனைத்து ப், பயிர் வளர்த்துத் தந்தவர்ககு.
பாசம் கலந்து, பாரம்தனைச் சுமந்து , பரிவுடன் உளைத்தவர்க்கு.

வேகும் வயிறதுவோ, வதங்காமல் இருப்பதற்கு.
வியர்வை வழித்தெறிந்து, வாடாது உழைத்தவர்க்கு.
சூட்டிடுவோம் பொன்னாரம் , வாழ்த்திடுவோம், புவியது இருக்கும் வரை.
பொன்.தர்மா
.