சந்தம் சிந்தும் கவிதை

பொன்.தர்மா.

வணக்கம்.
சந்தம் சிந்தும் கவி நேரம்.
********குடு குடு கிழவி *******
“”‘””‘””'”’””””””””””””””””””””””
வக்கணையாய்ப் பேசும் வாயாடிக் கிழவி அவள்.
வாயாலை புகைவிட்டே வங்காளமும் போய் வருவாள்.

செதுக்கிய சிலையாட்டம் , இளம் பருவக்,காலமதில்.
உருகியே , தடியாக , ஓய்ந்த இந்த, நேரமதில்.

வாயில் , தடதடக்கு , சொல்லில் பெரு மிடுக்கு .
காலில் உறுதி வேண்டி , கம்பு ஒன்று கையில் பிடிப்பு.

ஆடு , மாடு , பட்டியென , வருமானமும் அள்ளிக் கொட்டும்.
கோடிப் புறங்களெல்லாம், குலக்கு மாங்கனிகள் , தரை தட்டும்.

கொல்லைப் பக்கத்திலை , கோணலான ஒரு பட்டை .
கோழிகளோ , கும்பலாகப்
போட்டிருக்கும் , அதிலே , நிறைய முட்டை .

சள்ளையிலே , சதிராடும் , சாயம் கழன்ற கறுப்புப் , பை .
கிள்ளி அசை போட, அதற்குள்ளே நுழையும், அடிக்கடி , அவரது , கை .

பெற்றுப் போட்டதுவும், கிழவியோ,எட்டுப் பத்து. ( ஆனால்)
எடுபிடிக்கோ உதவுவது, பக்கத்து வீட்டுப் , பட்டு ….
குடு குடு கிழவி…
பொன்.தர்மா