வியாழன் கவிதை

பொன்.தர்மா

வணக்கம்
வியாழன் கவிதை நேரம்.
மாற்றத்தின் திறவுகோல்.
**************
மகிழ்ச்சியின் பிரபாவம், மனிதத்தின் மதிப்பேற்றம்.
மாயப் பிடிதனில் மிதிபடாது எழுந்தோட்டம்.

நாசமாம் செயல்களை , நறுக்கியே விலக்கிடுதல்.
தேசத்தின் நலனுக்காய் , நிமிர்ந்து மே உளைத்திடுதல்.

தேம்பி டும் சோம்பலுக்கு, எட்டிநின்றே புள்ளி வைத்தல்.
தூணாக நிமிர்த்து நின்று, தாங்கிடவே , உறுதி கொள்ளல்.

வழி தெரியா அலைபவர்க்கு, வழிகாட்டி ஆகிடுதல்.
விழி இருந்தும் குருடராக இருப்பவர்க்கு, சாட்டை கொண்டு சாடிடுதல்.
மாற்றத்தின் திறவுகோல்.
பொன் . தர்மா
.
.