வியாழன் கவிதை

புரிதலுக்குள் பூகம்பம்..

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1951

புரிதலுக்குள் பூகம்பம்..

தெளிவான சிந்தனை
அணைக்கட்டும் உந்தனை
சீரிய பணிகளோடு
இணைக்கட்டும் அன்பினை
புரிதல் என்பது கடினம்
என்றுமே விரிசல் காணாது
காத்திடுக நெஞ்சினை..

உடைந்த கண்ணாடி
என்றும் மீள இணையாது
கிழித்துத் தோலைமெல்லவும்
குருதி காணும் எப்பொழுதும்
உறுதி என்பது அன்பில்
இறுதி வரை நிலைக்கும்
புரிதல் தென்றல் போலும்
புரியாமை சூறாவளி போலும்..

வஞ்சகம் காணா இதயம்
எண்ணித் துணியும் யாவும்
அஞ்சிட வேண்டாம் மனிதா
கெஞ்சுதல் முறையும் அல்ல
எஞ்சிடும் காலம் நெடுக
புரிதல் செய்ய முயன்றிடு..
சிவதர்சனி இராகவன்
21/3/2024