வியாழன் கவிதை

புன்னகைக்கு ஈடேது

சிவதர்சனி

வியாழன் கவி 1957..

புன்னகைக்கு ஈடேது..

பூக்களின் இதழ்விரிப்பாய்ப்
பூமியில் எத்தனையோ
இதயங்களின் புன்னகை
துயரத்தின் ஆழத்தில் வீழ்ந்து
தூண்டிற் புழுவாய்த் துவண்டு
ஆற்றுவார் தேற்றுவாரின்றித்
தவித்த உளங்களின்
உணர்வின் தெறிப்புகள்
அப்பப்போ மின்னல் போல்
மின்னி மறையும் அழகியல்
புன்னகைக் கோலமாய்
மனித மனங்களைப் புடமிட
எங்கும் எதுவும் அழகே
புன்னகை அதனிலும் எழிலே…
சிவதர்சனி இராகவன்
4/4/2024