வியாழன் கவிதை

புனிதா கரன் கவி 06

பாரதி கண்ட புதுமைப் பெண்ணே//
தாரகை உனையே தரணி வியந்திட//
வீசும் தென்றலாய் வாசம் வீசியே//
பேசும் மொழியில் வீச்சைக் காட்டி//
கல்வி கற்று கசடற வாழ//
பல்கிப் பெருகுமே பலவகை நன்மையும்//
சீராய் நீயும் சிறந்தே விளங்கிட//
சோதியாய் நீயும் ஒளிர்ந்திடல் அழகே//
அச்சம் விடுத்து அகந்தை யின்றி//
அடங்க மறுத்தே அகிம்சை வழியே//
தன்னல மற்று தெளிதல் அறமே//
முடியா தென்ற முயலாமை விடுத்து//
முடியு மென்றே முயல்தல் சிறப்பே//
வையம் போற்றி வாகையும் சூடும்//
வாழ்வாங்கு வாழ வாழ்த்தி வணங்கும்//

புனிதா கரன்