சந்தம் சிந்தும் கவிதை

பாவை—“பாமுக பூக்கள்”

இருபது எம் கவிஞர்
இள மொட்டு கவிகள்
வரும் அவர்கள் கவி வார்தல்
வாரம் எந்தன் கடமை
பதிப்பில் அவர் ஆக்கம்
பரவுமெனில் ஊக்கம்
அதிகரிக்கு என எழுந்த
ஆர்வம் நூல் ஆக்கம்
**
வெளியாகி வந்து வெளியீடும் கொண்டு
எழுத்தாளர் சங்க அறிமுகமும்
கண்டு
கவியாளர் உள்ளம்
ஆனந்த வெள்ளம்
உவகையில் என் இதயம்-கவி
உறவுகளின் உயர்வில்
***
பட்டி வந்து சேராத
குட்டிகளை தேடும்
பாணியில் என் கண் இணைவோர்
கவிதைகளை தேடும்.
கொட்டி அவர் குவிக்கின்ற
வரிகளிலே வழியும்
கொஞ்சு தமிழ் எழிலை மனம்
பருக நாடி ஓடும்
கட்டு பணம் மாடி மனை
வாகனங்கள் ஜம்பம்
காட்டிடாத மகிழ்வை அவர்
கவிதை என்னுள் தூவும்
விட்டு உயிர் போனாலும்
எந்தன் சந்த உறவீர்
வேகையிலும் எந்தன் உடல்
உம் நினைவில் ஊறும்