சந்தம் சிந்தும் கவிதை

பால தேவகஜன்

மாசி பதின்னான்கு

அவளும் நானும்
உன்னத உணர்வோடு
ஒன்றியிருந்த நாட்கள்
நீண்டதொரு இடைவேளைக்கு
பிற்பாடு பிறந்த நினைவுகளால்
என் நிலமை கொஞ்சம்
தடுமாற்றத்தில் தள்ளாடியது.

அன்று என் கூடவே இருந்து
நிறைந்த சுகங்கள் தந்தாய்
இன்று என்னை விட்டு விலகி
நிறைந்த சோகம் தந்தாய்.
உன் மனம் பற்றிய போதினிலே
என் மனதை தந்தேன் உன்னிடம்.
காதல் மயக்கத்தில் நான்
கால மயக்கத்தில் நீ!
காத்திருப்பை எனதாக்கிவிட்டு
காத்திரமாய் நீ நகர்துவிட்டாய்.

என் தனிமையை போக்கிட
வரமாய் வந்தவள் நீ!
என்று எண்ணிய என் எண்ணத்தை
சிதைத்துவிட்டு மீண்டும் என்னை
தனிமைக்குள் தள்ளிவிட்டு
இனிமைகாண சென்றவளே!
உன் இளமை முதிரும்போது
என் இனிமையை நீ! உணர்வாய்.

இன்றும் உனக்காய்
காத்துக்கிடக்கின்றேன்
உணர்வாலே உன்னையே
நினைத்துக்கிடக்கின்றேன்
நினைவுகளை மட்டும் விட்டுவிட்டு
காதல் தடயங்கள் யாவையுமே
நீ மறைத்துவிட்டுச் சென்றாய்.

உன்னாலே வாழ்வில்
தட்டு தடுமாறி தவிக்கின்றேன்
தாமதம் இன்றி நீ! வருவாயா?
காலம் விரைந்து செல்கிறது
காதலும் விரையம் ஆகிறது
காத்திருக்கும் எனக்காக
கருணைகொண்டு வந்திடுவாய்
உன்னையே என் நெஞ்சத்தில்
பொதிந்து நான் வைத்திருக்கின்றேன்.