சந்தம் சிந்தும் கவிதை

பாலா சுரேஷ்

தொற்று
தொற்று பயத்தோடு
முற்று பெற்றது
மீண்டும் ஒரு ஆண்டு
பற்றி பிடித்த தொற்று
பல்லாயிரம் மனிதர்களை
பலி எடுத்து
சற்று தணிந்தது வேகம்
சுற்றி உலகை வலம் வந்து
முற்றாய் இன்னும் அற்று போகாமல்
ஒட்டி உறவாடுது இன்னும்
தடுப்பு ஊசியும் தடுக்க முடியாத
தடிப்பு வைரஸ்
விட்டேகுமா இல்லை கண்ணுள்
விரல் விட்டு ஆட்டுமா
தொடர்ந்து-