சந்தம் சிந்தும் கவிதை

பாலதேவகஜன்

பகலவன்

உலகம் ஒளிர
ஒருவன் நீயே!
உயிர்கள் வாழ
உறுதுணையும் நீயே!

உதிக்கும் உனையே
துதித்தே நிற்போம்
உழவரின் தோழனாய்
உனையே வைப்போம்.

பிணியின் மருந்தாய்
ஒளி தரும் கதிர்கள்
பனியின் படர்வை
உருக்கும் கதிர்கள்.

பகலவன் கதிர்மழை
புத்துணர்சி தருமே
பார்வைகள் துலங்கிட
பேரொளி வரமே!

இரவை நீக்கி
இன்பம் அளிப்பான்
இவனே உலகின்
இணையில்லா சொத்து.