சந்தம் சிந்தும் கவிதை

பாலதேவகஜன்

பொங்கலோ பொங்கல்

ஊரெல்லாம் பொங்கல்
உளமெல்லாம் துள்ளல்
உதித்திடும் அவனுக்காய்
உணர்வோடு பெரும் பொங்கல்

கதிர்தந்த கதிரவனிற்கு
பொங்கலோ பொங்கல்
வண்ண வண்ண கோலங்களின்
நடுவினிலே பொங்கிடுமே!

உயிர் வாழ உணவுதந்த
உத்தம உழவர்களை
உயரத்தில் வைக்கின்ற
உன்னத பொங்கல்.

தன்னொளி தந்து
பயிரின் உயிர்காத்த
கதிரவனிற்கு நன்றி கூறும்
காத்திரமான பொங்கல்.

கதிரவன் ஒளிக்கதிரை
கண்டுகொண்ட பொங்கற்பானை
பொங்கி வழிந்து மகழ்வுகாட்டும்
தைத்திருநாள் பொங்கல்.

இன்பம் தரும் பொங்கலினை
பொங்கலோ பொங்கலென்றை
கூடி முழங்கிடுவோம்
கொண்டாடி மகிழ்ந்திடுவோம்.