பெருமை
கருமையாய் படர்ந்திருக்கும்
குற்றம் குறைகளுக்குள்
என் வாழ்வு கரைதிடாது காத்து நின்றது
உங்கள் பெருமை அப்பா!
போற்றிடவும் புகழ்ந்திடவும்
பொல்லா வயதினில் புலனவில்லை
போற்றி உங்களை பணிந்திடவோ
பொல்லா காலமும் விட்டதில்லை.
உதட்டில் கோவம் வைத்து
அதட்டி என்னை ஆளாக்கிய
உணர்வில் கோவமில்லா உத்தமனே!
உன் பெருமை சொல்லிடவோ
எம் மொழிக்கும் வலிமையில்லை.
பருவங்கள் நாடும் பாதைகளை
உன் புருவ அசைவுகளால் மூடி
நல் வழி காட்டிய என் நாயகனே!
அன்று நீ என் பகைவனானாய்
இன்று என் இறைவனானாய்.
ஊரெல்லாம் உன் பெருமை
எவரெவரோ சொல்லயில
உள்மனதை உருக்குதையா
உடனிருந்த எனக்குமட்டும்
அன்று ஏனோ உணரவில்லை.
என் தேவைகளை நிறைவேற்றாத
பொல்லாத அப்பா! நீங்கள் என
வாழும் காலம்வரை வெறுப்புடனே
உங்களை கடந்திருக்கின்றேன்.
ஆனால் இன்று எனக்கான தேவைகள்
எதுவென்று பார்த்து பார்த்து
நீங்கள் நிறைவேற்றியிருப்பதை
உணர்ந்து உங்கள் மீது பெரு மதிப்பும் பெரும் பக்தியும் கொள்கின்றேன்.
மிதிச்ச புல்லு சாகாத
மென்மையானவன் புள்ளையா நீ!
என்ற ஏழன பார்வையோடு
எவனும் எனை பார்த்திடாது
அப்பனுக்கு தப்பாதவன் என்று
உங்கள் பெருமை என்றைக்கும்
காத்து நிற்பேன் நான் அப்பா!