சந்தம் சிந்தும் கவிதை

பாலகஜன்

இளமை துடிப்பு
இதங்களை தேட
இதய பிடிப்பு
உனையே நாட
காதல் பிறந்தது
கல்வி பறந்தது.

கன்னி உனையே
எண்ணி நிறைந்தேன்
கற்கும் காலத்தில்
காதலில் விழுந்தேன்
காலம் முளுவதும்
உன் கரம்பற்றியே
கடந்திட வேண்டி
கடவுளிடம் வேண்டினேன்.

காதலில் நீயும் நானும்
நிறைவாயிருந்தோம்
கால நகர்வில்
காதல் தளர்ந்தது
நீ காட்டும் அன்பினில்
களவு தெரிந்தது
அளவே இன்றி
பிடித்துப்போன உந்தன்
நடிப்பும் புரிந்தது.

வலித்தது என் இதயம்
மொத்த வாழ்வும்
உன் மொத்த நடிப்பில்
சிதறு தேங்காயாய்
சிதறிப்போனது
நடிப்போடு நீ பழகியது
உன் பிடிப்போடு மட்டுமே!
இருந்த எனக்கு புரியவில்லை.

பிரியத்தோடு நான்!
பிரிதலோடு நீ!
இதில் புரிதல் எங்கே
ஜெயிப்பது.
என்னை பிரிந்து போ
பறுவாயில்லை இனி வேறெந்த
ஆண்களின் வாழ்வையும்
உந்தன் நடிப்பால்
நாசம் செய்யாதே
நான் பட்ட வலி போதும்
இதையாவது என்
காதலுக்காக செய்
என் நினைவாகி போனவளே!