வியாழன் கவிதை

பவானி மூர்த்தி

என் உயிர்க் கண்ணம்மா

இன்பத்தில் ஊறிடும்
இனியவளே கண்ணம்மா
துன்பத்தை விரட்டிடும்
தூயவளே கண்ணம்மா
என்னுயிராய் மாறியவளே
என்றனது கண்ணம்மா
பொன்னென மின்னிடும்
புதுமையே கண்ணம்மா

கண்ணம்மா என்றபேர்
காதலை சொல்லுதடி
வண்ணமாய் வா அருகில்
வாரியும்
அணைத்திடுவேன்
உண்மையைச்
சொல்லிடிலோ உன்மத்தம்
ஏறுதடி
கண்களில்
மையல்கொண்டு
கன்னத்தில் முத்தமிட்டேன்

ரதியாக வந்தவளே
ரசித்தேனே உன்னழகை
பதியாகப் பதிப்பாயோ
பரிதவிக்கும் என்றனையே
விதிசெய்த வித்தகியே
விலகாதே என்னைவிட்டே
சதிகாரி என உலகம்
சண்டையிடும் உன்னிடமே !

இமைக்கின்ற விழிகளிலே
இமையாக நானிருப்பேன்
சுமையல்ல நீ எனக்கு
சுகந்தானே கண்ணம்மா
அமைகின்ற காதலிலே
அனுதினமும் நீ வேண்டும்
இமைப்போழுதும்
என்னுயிராய் இருப்பவளே
கண்ணம்மா ! கண்னம்மா !
என்னுயிரே கண்ணம்மா !